அமெரிக்க ஜனாதிபதியுடன் தென் கொரிய ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல் - கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஒப்புதல் - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

அமெரிக்க ஜனாதிபதியுடன் தென் கொரிய ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல் - கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஒப்புதல்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுடன் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இனை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இது குறித்து மூன் ஜே இன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், இப்போதுதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஒரு பெரிய உரையாடலை நடத்தினேன். கொரோனாவின் உலகளாவிய சவால்களுக்கு, பருவ நிலை மாற்ற பிரச்சினைகளுக்கு, பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய ஆட்சியை வரவேற்றேன் என கூறி உள்ளார். 

மேலும், தென் கொரியா, அமெரிக்கா கூட்டணியை மேலும் மேம்படுத்தவும் நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் நாங்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம் எனவும் கூறி உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் பின்னணியில் இருந்தார். ஆனால் இரண்டாவது சந்திப்புக்கு பின்னர் அந்த பேச்சுவார்த்தை தொடரவில்லை. 

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவும், வட கொரியாவும் பேச்சு நடத்த வேண்டும் என்பது மூன் ஜே இன் விரும்புகிறார். எனவே அவர் ஜோ பைடனுடன் நடத்திய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment