பாடசாலைகளில் கட்டாய மத உடையை தடை செய்தது இந்தோனேஷியா - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

பாடசாலைகளில் கட்டாய மத உடையை தடை செய்தது இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் பொதுப் பாடசாலைகளில் மத உடையை கட்டாயமாக்குவதைத் தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவினை சமூக ஆர்வர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்தேனேஷிய அரசாங்கத்தின் இந்த தீர்மானம் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ஹிஜாப் அணிய வேண்டிய கட்டாயத்தின் தேசிய சீற்றத்தைத் தொடர்ந்து வெளிவந்துள்ளது.

இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக ஆறு மதங்களை அங்கீகரிக்கிறது, கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இஸ்லாத்தின் பழமைவாத விளக்கங்கள் மத சகிப்பின்மையைத் தூண்டுகின்றன என்ற கவலை இந்தோஷியாவில் அதிகரித்துள்ளது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஒரு பாடசாலையில் முஸ்லிம் அல்லாத பெண் மாணவர்கள் ஹிஜாப் அணியுமாறு கட்டாயப்படுத்திய செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, பாடசாலை ஆடைக் குறியீடுகள் மற்றும் மத உடை விவகாரம் தொடர்பான புதிய சட்டமூலத்தில் அரசாங்கம் புதன்கிழமை கையெழுத்திட்டது.

சிறுமிகளில் ஒருவரின் பெற்றோர் நடத்திய போராட்டத்தின் காரணமாக இந்த பிரச்சினை தேசிய கவனத்தை ஈர்த்தது, இது பற்றிய செய்தி சமூக ஊடகங்களில் பரவியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment