நீலங்காடு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிப்பு! - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

நீலங்காடு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிப்பு!

(எம்.நியூட்டன்)

காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் இணைந்து காணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியதால் காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி குறித்த காணிகளை அளவிடும் பணிகளுக்காக நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்த போது அங்கு ஒன்று கூடியவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்பட்டுத்தினர்.

இதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் பேச்சாளர் சுகாஷ் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment