கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம் : அமைச்சர் தினேஷ் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம் : அமைச்சர் தினேஷ்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நியூஸ் 18 இற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுடனான உறவு ஒரு திட்டத்துடன் மாத்திரம் முடிந்து போகாது. இரு நாடுகளுக்கிடையேயான உறவு ஒரு சிறந்த நட்புறவு. 

இந்த நட்புறவின் மூலம் இந்த சிக்கல்களை தீர்த்து, இலங்கை இந்தியாவிற்கிடையிலான உறவை முன்நோக்கி கொண்டு செல்ல எம்மால் முடியும். இந்தியாவுடனான பாரிய திட்டங்கள், முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடரும்.

மேலும், ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு கிழக்கு முனையம் தொர்பாக பாரிய அர்ப்பணிப்பு காணப்பட்டது. இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை நடாத்திய பேச்சு வார்தை்தைகளின் தோல்வி இந்த பிரச்சினையில் பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது.

அதே போன்று, கொழும்பு துறைமுகத்தின் மிகப் பெரிய துறைமுகமாக மேற்கு முனையம். நான் குறிப்பிட்ட மற்றுமொரு காரணம், இந்தியாவிலிருந்து கிடைக்கும் கொள்கலன்களாலேயே குறித்த முனையம் செயற்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad