சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பதவிக்கான நியமனக் கடிதத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்து கையளித்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சினதும், தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினதும் செயலாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ண, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment