ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ், தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திருப்பப்பெறுவேன் என அறிவித்திருந்தார். அந்த வகையில், பலமுறை இரு நாடுகளில் இருந்தும் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் பதவிக் காலம் 19ம் திகதியுடன் முடிவடைந்து 20ம் திகதி ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு முன்னதாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெருமளவு படைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், இரு நாடுகளில் இருந்தும் கணிசமான அளவு படைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 500 வீரர்கள் மட்டுமே நிலைநிறுத்தப்படுகின்றனர்.

அதேபோல் ஈராக்கிலும் தற்போது பணியில் உள்ள வீரர்களில் பெருமாளானோர் திருப்பப் பெறப்பட்டுள்ளனர். ஈராக்கிலும் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல ஆண்டுகளாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரம் பேர் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் 2 ஆயிரத்து 500 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரத்து 500 வீரர்களும் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment