அர்ஜுன் விரைவில் அழைத்து வரப்படுவார், அறிக்கை கிடைத்ததும் அதற்கான ஏற்பாடு என்கிறார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

அர்ஜுன் விரைவில் அழைத்து வரப்படுவார், அறிக்கை கிடைத்ததும் அதற்கான ஏற்பாடு என்கிறார் அலி சப்ரி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிங்கப்பூரில் இருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிக்கை இன்று அல்லது நாளை தமக்கு கிடைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிக்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவால் நேற்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே நீதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புமாறு சிங்கபூர் அரசாங்கத்திடம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக தகவல்கள் எவையும் இருக்கிறதா? என்று லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய நீதியமைச்சர் அலி சப்ரி, இந்த விடயம் தொடர்பாக சட்ட மாஅதிபரிடம் எழுத்துமூலம் அறிக்கை ஒன்றை கோரி விண்ணப்பித்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் நாடாளுமன்றில் அந்த தகவலை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment