முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது, ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது என்கிறார் மல்கம் ரஞ்சித் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது, ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது என்கிறார் மல்கம் ரஞ்சித்

முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம்கள் கருதக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் மூலம் ஷரியா சட்டமும் ஷரியா சட்டத்தினை போதிக்கும் அமைப்புளும் இந்த தாக்குதலிற்கான முக்கிய காரணம் என்பது தெரிய வந்துள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறாவிட்டால் வேறு மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறாவிட்டால் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை வேறு தரப்பினரிடம் வழங்க வேண்டும், மாற்று வழிமுறைகளை தேட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்த விவகாரங்கள் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் பின்னோக்கி செல்வது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் தாக்குதல்கள் குறித்த உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் வரை கத்தோலிக்கர்கள் விழிப்புடண் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஜனாதிபதியும் இந்த குண்டு தாக்குதல்கள் குறித்த முழுமையான விசாரணைகள் இடம்பெறும் என உறுதியளித்துள்ளனர்.

இது குறித்த விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு மாத்திரமின்றி ஏனைய அரச அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும், அரசியல் தேவைகளுக்காகவும் இரகசிய உடன்பாடுகளிற்காகவும் நாங்கள் இவை மூடி மறைக்கப்படுவதை விரும்பவில்லை.

No comments:

Post a Comment