மாதகல்/சென். தோமஸ் பெண்கள் பாடசாலையின் பௌதீக வள பற்றாக்குறை பற்றி அங்கஜன் ஆய்வு - News View

Breaking

Post Top Ad

Saturday, December 26, 2020

மாதகல்/சென். தோமஸ் பெண்கள் பாடசாலையின் பௌதீக வள பற்றாக்குறை பற்றி அங்கஜன் ஆய்வு

மாதகல் / சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை (24) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மேற்கொண்டார்.

மாதகல் பகுதிக்கு நிகழ்வு ஒன்றுக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை சமூகத்தின் விஷேட அழைப்பின் பேரில் பாடசாலை சுற்றாடல் நிலமைகளை அறிவதற்காக பாடசாலைக்கு தீடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அப்பாடசாலையில் பௌதீக வளப்பற்றாக்குறைகள் பற்றி அறிந்து கொண்டார். 

அப்பாடசாலை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்ற போதும் பாடசாலையில் பௌதீக வளங்கள் குறைவாகவே காணப்படுவதாக அப்பாடசாலை அதிபர் சுட்டிக்காட்டி தேவைப்பாடுகள் பற்றிய கோரிக்கை கடிதம் ஒன்று அங்கஜன் இராமநாதனுக்கு கையளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோ்கள், அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad