ட்ரம்ப் பாணியிலேயே அவரது தோல்வியை கூறும் சுதந்திர தேவி சிலை - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

ட்ரம்ப் பாணியிலேயே அவரது தோல்வியை கூறும் சுதந்திர தேவி சிலை

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை ட்ரம்பிடம் அவரது பாணியிலேயே அவரின் தோல்வியை கூறும் வகையிலான கேலிச்சித்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்விட்டரில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரம்பை கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை ட்ரம்பிடம் அவரது பாணியிலேயே அவரின் தோல்வியை கூறும் வகையிலான கேலிச்சித்திரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அதாவது ட்ரம்பை நோக்கி சுதந்திர தேவி ‘யூ ஆர் பயர்ட்’ (நீங்கள் பதவி நீக்கப்பட்டீர்கள்) என கூறுவதாக அந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. ட்ரம்பின் தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தன்னுடன் ஒத்துப்போகாத ஏராளமான அதிகாரிகளின் பதவியை பறித்துள்ளார்.

அப்போதெல்லாம் அவர்களின் பெயர்களுடன் ‘யூ ஆர் பயர்ட்’ என ட்ரம்ப் குறிப்பிடுவது வழக்கம். அதே பாணியில் ட்ரம்பின் பதவி பறிக்கப்பட்டதாக சுதந்திர தேவி கூறும் வகையில் இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad