பி.சி.ஆர். முடிவுகள் வராதவர்கள் வீடுகளிலேயே இருக்கவும் - இராணுவ தளபதி - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

பி.சி.ஆர். முடிவுகள் வராதவர்கள் வீடுகளிலேயே இருக்கவும் - இராணுவ தளபதி

பி.சி.ஆர். பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி கொண்டவர்கள், அதன் முடிவுகள் வரும்வரை வெளியில் நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பலர், அதன் முடிவுகள் கிடைப்பதற்கு முன்னரே வெளியில் நடமாடுகின்றார்கள். இத்தகையவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்நிலையிலேயே இராணுவ தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பி.சி.ஆர். பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திய பலர் முடிவுகள் வராதநிலையில் பல இடங்களுக்கு சென்றுள்ளதை அவதானித்துள்ளோம் இது மிகவும் ஆபத்தானது.

மேலும், நீங்கள் நோயாளியாக இருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற காரணத்திற்காகவே உங்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்.

ஆகவே, இதனை உணர்ந்து, வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment