நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை எவரையும் சிகிரியாவிற்கு வர அனுமதிக்கப்படமாட்டாது என சிகிரிய மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான சிகிரிய திட்ட அலுவலகத்தின் தினசரி நடவடிக்கைகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும்.
இருப்பினும், சிகிரியா அடிவாரத்திலோ அல்லது சிகிரியா அருங்காட்சியகத்திலோ எவரும் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது.
அத்துடன், சிகிரிய பகுதிக்கு எவரும் வருகை தர வேண்டாம் என்றும் அதன் அதிகாரி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிகிரிய மத்திய கலாசார நிதியத்தில் பணியாற்றிய 10 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment