இதுவரையில் சுகாதார பிரிவினரிடம் வந்து சேராத மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையிலுள்ள ஊழியர்கள் அல்லது, அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் விரைவில் 0113456548 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். இவ்வாறானவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
இவ்வாறானவர்கள் தொடர்பில் தெரியவரும் பட்சத்தில் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment