கொட்டகலையில் மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் - மக்கள் பெரும் அச்சத்தில்! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

கொட்டகலையில் மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் - மக்கள் பெரும் அச்சத்தில்!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால்நடைகளை எடுத்து செல்வதனை நாம் கடந்த காலங்களில் ஊடகங்களுடாக வெளிப்படுத்தியிருந்தோம். 

எனினும் இது குறித்து வன பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் 01.10.2020 அன்று இரவு வீடுகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டினுள் வருகை தந்து வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்றினை கவ்விச் செல்வது அந்த வீட்டில் உள்ள சி.சி.டி.வி கமாராவில் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் மக்கள் நடமாடும் பகுதியில் இரவு வேளையில் வெளிச்சத்திலும், சிறுத்தைகள் வருகை தந்து கால்நடைகளை கொண்டு செல்வதனால் இப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தைகள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளை, கோழி கூண்டினை உடைத்து கொண்டு செல்வதனை சி.சி.டி.வி கமராவில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பொதுமக்கள் உயிர்களுக்கும் சிறுத்தைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

No comments:

Post a Comment