திருகோணமலை காட்டுப் பகுதியில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

திருகோணமலை காட்டுப் பகுதியில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாம் கட்டை காட்டுப் பகுதியிலிருந்து இன்று (3) ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

காட்டுக்குச் சென்ற நபரொருவர் வழங்கிய தகவலை அடுத்து அப்பகுதியை சோதனையிட்ட போது கட்குவாரிக்கு அருகில் T-56 ரக துப்பாக்கி ரவைகள் 155 மற்றும் மெகசின் 4 மீட்கப்பட்டுள்ளன.

பன்குளம் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட குறித்த ஆயுதங்கள் கடந்த யுத்த காலத்தின் போது விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஆயுதங்களை தற்போது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment