சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் : சிவாஜிலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் : சிவாஜிலிங்கம்

ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜக்கிய இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஸ்டியை உருவாக்க முயற்சிப்போம் என தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தவிர வேறுயெந்த முறையும் வராது என்பதுடன் ஜக்கியம், சமஸ்டி குறித்த பேச்சுக்கு இடமில்லை என சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியல் அமைப்பு என்ற ஒன்று தேவையில்லை. ஏற்கனவே உள்ள அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட்டவை. 

ஆகவே, எங்களுக்கு இலங்கைக்குள் தீர்வு இல்லையென்றால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜக்கிய இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம். 

அதுவும் சாத்தியம் இல்லையென்றால், நாங்கள் பிரிந்து சென்று தனி அரசை உருவாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் சிந்தனையாக இருந்தால், அதனை நோக்கி பயணிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அமைச்சருக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம். 

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் நாம் எங்களுக்குரியதை செய்ய முடியாது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

வீரகேசரி

No comments:

Post a Comment