ஓட்டமாவடியில் டெங்கினால் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

ஓட்டமாவடியில் டெங்கினால் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோயினால் பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி, மூன்றாம் குறுக்கில் வசிக்கும் நாற்பத்தி மூன்று வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோய் பரவும் வகையில் நீர்த்தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்குப்பிறகு இவ்வாறு சுத்தமில்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment