மன்னாரில் 724 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

மன்னாரில் 724 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகள் உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று (23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ர பொலிஸ் பொறுப்பதிகாரி பந்துல வீரசிங்கவின் பணிப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் தலைமையிலான ஊழல் தடுப்பு பிரிவினரே மேற்படி அனுமதி பத்திரம் இல்லாமல் 724 கிலோ 500 கிராம் கடலட்டைகள் மற்றும் அவற்றை உடமையில் வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையிடம் ஒப்பட்டைக்கப்பட்டு மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி 50 இலட்சம் என கணிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad