20வது திருத்தத்தை சமர்ப்பித்தது அரசாங்கம் - நாடாளுமன்றத்தில் குழப்பநிலை - எதிர்கட்சி ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

20வது திருத்தத்தை சமர்ப்பித்தது அரசாங்கம் - நாடாளுமன்றத்தில் குழப்பநிலை - எதிர்கட்சி ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பித்த 20வது திருத்தத்தின் நகல்வடிவம் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

20வது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

20வது திருத்தத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் 20வது திருத்தம் வேண்டாம் என்ற வாசகங்களை தமது உடைகளில் பொறித்தவாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

நீதியமைச்சர் அலி சப்ரி 20வது திருத்தத்தின் நகல்வடிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

No comments:

Post a Comment