145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி - தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 6, 2020

145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி - தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு

145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி-SLPP Won 145 Seats in Parliamentary Elections 2020
நடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் அக்கட்சி ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் 6,853,693 வாக்குகளை பெற்று 59.09% வாக்குப் பதிவுடன் இந்த வெற்றியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மொத்தமான 225 ஆசனங்களில் 2/3 பங்கான 150 ஆசனங்களை பெறுவதற்கு மேலும் 5 ஆசனங்கள் பெற வேண்டியுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (2 ஆசனங்கள்), ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (01 ஆசனம்), தேசிய காங்கிரஸ் (01 ஆசனம்) உள்ளிட்ட கட்சிகள் இணைவதன் மூலம், அதனை அடையும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இதன் அடிப்படையில், 196 விகிதாசார முறை மூலமான ஆசனங்களில் 128 ஆசனங்களையும், தேசியப்பட்டியில் மூலமான 25 ஆசனங்களில் 17 ஆசனங்களையும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் 2,771,984 (23.90%) வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை (47+7 போனஸ்) பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து 445,958 (3.84%) வாக்குகளைப் பெற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

கட்சிகளும் அவை பெற்றுக் கொண்ட ஆசனங்களும் வருமாறு
145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி-SLPP Won 145 Seats in Parliamentary Elections 2020

No comments:

Post a Comment