கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ZA.நஸீர் அகமட் அவர்களுக்கும், மீனவர் சங்கம் மற்றும் பொது அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் காத்தான்குடி பூநொச்சி முனையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரக்குழு தலைவர் SHA.அஸீஸ் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் இன்று 02.07.2020 மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ULMN.முபீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான MH.கபூர் மற்றும் நஸீர் ஹாஜியார், ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் MI.தஸ்லிம், ஏறாவூர் போக்குவரத்து சாலையின் முன்னாள் முகாமையாளர் சகோதரர் ஹனி, வாழைச்சேனை போக்குவரத்து முன்னால் முகாமையாளர் அஸீஸ், பூநொச்சி மீனவர் சங்க உறுப்பினர்கள் RDS சங்க உறுப்பினர்கள் பிரதேச ஜும்மா பள்ளி நிருவாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு - கல்குடா
No comments:
Post a Comment