கொவிட் நோய்த் தொற்றை அடையாளம் காண்பதற்கு முழுமையான தன்னியக்க PCR உபகரணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

கொவிட் நோய்த் தொற்றை அடையாளம் காண்பதற்கு முழுமையான தன்னியக்க PCR உபகரணம்

கொவிட் 19 ஐ விரைவாக அடையாளம் காண்பதற்கு முழுமையான PCR தன்னியக்க உபகரணம் ஒன்றை சர்வதேச ரொடரி கழகம், அரச வைத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

PCR உபகரணம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

முழுமையான தன்னியக்க புதிய PCR உபகரணத்தின் பெறுமதி இரண்டு கோடி இருபது இலட்ச ரூபாவை விடவும் அதிகமாகும். அதன்மூலம் ஆராய்ச்சிகளின்போது முகங்கொடுக்கும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முடியும் என்பது முக்கிய விடயமாகும்.

விரைவாகவும், துல்லியமாகவும் மற்றும் செயற்திறனை அதிகரிக்கவும் புதிய உபகரணத்தின் மூலம் முடியும் என்று வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எதிர்காலத்தில் முகங்கொடுக்கக் கூடிய வேறு விதமான வைரஸையும் அடையாளம் காண்பதற்கு புதிய PCR உபகரணத்தை பயன்படுத்த முடியும்.

கொவிட் ஒழிப்புக்காக வைத்திய ஆய்வு உபகரணங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு ரொடரி கழகம் 12 கோடி ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ளது. அதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் ரொடரி கழக பிரதிநிதிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்ஹ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்ஹ, வைத்திய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார, ரொடரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் தலைவர் செபஸ்தியன் கருணாகரன், முன்னாள் தவிசாளர் கே.ஆர்.ரவீந்திரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள தவிசாளர் புபுது த சொய்சா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் ரொடரி கழகத்தின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment