தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1423 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் 361,438.32 ரூபாவையும் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (HDFC) வங்கி 1,200,000 ரூபாவையும் இலங்கை கண்தானச் சங்கம் 100,787.40 ரூபாவையும் NSB Fund Management Co.Ltd 1,000,000 ரூபாவையும் Sri Lanka Savings Bank Ltd 1,000,000 ரூபாவையும் திருமதி டி.எம்.எம்.திசாநாயக்க 5,000 ரூபாவையும் திரு.சனத்சந்ரசிறி பத்திரன 5,000 ரூபாவையும் சிறுமி Marzook Morita Saara 4,030 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
அதற்கான காசோலைகள் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வினால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்விடம் கையளிக்கப்பட்டன.
வரையறுக்கப்பட்ட கூட்டுறவு பிரதேச கிராமிய வங்கி சங்கம் 500,000 ரூபாவையும் கமநல அபிவிருத்தி திணைக்களம் 4,420,158.36 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் அதற்கான காசோலைகளை கையளித்தார்.
தேசிய மொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனம் அன்பளிப்பு செய்த 300,000க்கான காசோலை ஜனக்க பண்டார தென்னகோனினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
திரு. லேல்வள பந்துசேன குறுகே 50,000 ரூபாவிற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
திருமதி.ஜே.ஏ.டி.எனஸ்டா 25,000 ரூபாவையும் கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க 30,000 ரூபாவையும் மகாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியம் 102,500 ரூபாவையும் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சின் விஞ்ஞான தொழிநுட்ப மனிதவள அபிவிருத்தித்திட்டம் 108,891.13 ரூபாவையும் கலாநிதி சங்கைக்குரிய ஹாரிஸ்பத்துவே ஆரியவங்சாலங்கார மாஹிமி மன்றம் 50,000 ரூபாவையும் தமிழ் கலைஞர்கள் சங்கம் 20,000 ரூபாவையும் Friends Lanka Child Foundation 600.000 ரூபாவையும் திரு.எல்.ஜி.பீட்டர் 5,000 ரூபாவையும் திரு.எல்.சச்சிதானந்தன் 2,000 ரூபாவையும் திரு.கே.எஸ்.கே.விஜயரத்ன 35,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,423,421,045.71 ரூபாவாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment