ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களே எம்மை அழைத்துச் சென்று சிறிகொத்தாவில் அமரச் செய்வார்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களே எம்மை அழைத்துச் சென்று சிறிகொத்தாவில் அமரச் செய்வார்கள்

(செ.தேன்மொழி) 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா ரணில் விக்கிரமசிங்கவினதும், அகில விராஜ் காரியவம்சவினதும் தனிபட்ட சொத்து கிடையாது அவர்கள் உரிமைகோருவதற்கு என்றும் அது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் சொத்து எனவும் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, பொதுத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி கொண்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே தங்களை சிறிகொத்தாவில் அமர்த்துவார்கள் எனவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் திட்டமற்ற செயற்பாடுகளினால் மக்கள் அரசாங்கத்தின் மீது நமிபிக்கை இழந்துள்ளனர். அதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு எழுந்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னியினர் வெற்றி கொள்ளும் அளவிலான வாக்குகளையாவது பெற்றுக் கொள்ளுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடனே இணைந்து கொண்டுள்ளனர். ஆதவரவாளர்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கே பெருந்தொகையில் ஆதரவளிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக போலி பிரசாரங்களை தெரிவித்து வருகின்றனர்.

எமது தலைமையகம் மூடப்பட்டிருப்பதாகவும் இங்கு யாரும் இல்லை எனவும் போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் சிறிகொத்தா தலைமையகத்தை அவர்களது சொந்த சொத்தாகவே பயன்படுத்தி வருகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட சொத்து கிடையாது. அது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் சொத்தாகும்.

இதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்பினர் படுதோல்வியை சந்தித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களே எம்மை அழைத்துச் சென்று சிறிகொத்தாவில் அமரச் செய்வார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஒன்றிணைவது தொடர்பில் சிக்கலில்லை என்றார்.

No comments:

Post a Comment