எதிர்க்கட்சியினர் பொறுப்புள்ளவர்களாக செயற்பட வேண்டும் - சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

எதிர்க்கட்சியினர் பொறுப்புள்ளவர்களாக செயற்பட வேண்டும் - சந்திம வீரக்கொடி

(இராஜதுரை ஹஷான்) 

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தரப்பினர் செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியினை மக்கள் பொதுத் தேர்தல் ஊடாக இம்முறை முழுமையாக புறக்கணிப்பார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் பிறகே ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. 

5000 ஆம் ரூபா நிவாரண நிதி மக்களுக்கு அரசியல் கட்சி வேறுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளது. எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்கு இந்த நிவாரண நிதி விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். 

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் செயற்பட வேண்டும். நாட்டில் எதிர்க்கட்சி பொறுப்பற்ற விதமாக செயற்பட்டால் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் நிலை இல்லாமல் போகும். இது அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுவதற்கும் காரணமாக அமையும். 

ஐக்கிய தேசிய கட்சியினை மக்கள் தற்போது புறக்கணித்து வருகிறார்கள். பொதுத் தேர்தல் ஊடாக இம்முறை ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment