தனிமைப்படுத்தப்பட்ட அக்குரணை, பன்னில, சீனன்கோட்டை பகுதிகள் மீண்டும் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 3, 2020

தனிமைப்படுத்தப்பட்ட அக்குரணை, பன்னில, சீனன்கோட்டை பகுதிகள் மீண்டும் திறப்பு

தனிமைப்படுத்தப்பட்ட கண்டி மாவட்டத்தின் அக்குரணை மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளையிலுள்ள பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி, கண்டி - அக்குரணை, பேருவளை - பன்னில மற்றும் சீனன்கோட்டை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றிய ஒரு சிலர், அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பகுதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment