கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24ம் திகதி வரை மருத்துவ அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 34 லட்சத்து 26 ஆயிரத்து 413 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 497 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு மருத்துவ அவசர நிலை அமலில் உள்ளது.
இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமுலில் உள்ள மருத்துவ அவசரநிலை ஜூலை மாதம் 24ம் திகதி வரை நீட்டித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment