மீன் வியாபாரத்திற்கு வெளி மாவட்டங்களுக்குச் செல்வோர் தனிமைப்படுத்தப்படுவர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

மீன் வியாபாரத்திற்கு வெளி மாவட்டங்களுக்குச் செல்வோர் தனிமைப்படுத்தப்படுவர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் மீன்களின் தரத்தினை உறுதி செய்யும் நடவடிக்கையினை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள வெளிமாவட்டங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யும் விற்பனை நிலையங்களில் மீன்களின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் பரிசோதனைகள் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கானின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதர் இ.இன்பராஜ் தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் இப்பரிசோதனைகள் நடைபெற்றது.

அத்தோடு, மீன்களை வியாபாரத்திற்கு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் நபர்கள் மீண்டும் பிரதேசத்திற்கு வருகை தந்த பின்னர் பதினான்கு நாட்கள் சுய தனிமைப்படுத்திலிருந்து கொள்ளுமாறு மீனவர்களுக்கு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment