எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஐக்கிய நாடுகள் சபையின் 50வது உலக பூமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி 2006ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பழ மரக்கன்றுகளை நடும் திட்டம் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், முதற்கட்ட செயற்றிட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, பேத்தாழை, முறக்கொட்டான்சேனை, செங்கலடி, கரடியனாறு, தன்னாமுனை, சின்ன உப்போடை, புளியந்தீவு, கல்லடி, நாவற்குடா போன்ற பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் மருத்துவ, ஊட்டச்சத்துகள் நிறைந்த சுற்றுசூழல் வாயுச்சமநிலையைப் பேணும் வகையிலான மா, பப்பாசி, வேம்பு, கொய்யா, வில்வம், மாதுளை போன்ற ஐம்பது பழ மரக்கன்றுகளை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட வணக்கஸ்தலங்களிலும் நடப்பட்டு வருகின்றது.
இதில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி 2006ம் ஆண்டு உயர்தர மாணவர்கள் கலந்து கொண்டு பழ மரங்களை நட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment