உல்லாச விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிக்கரம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

உல்லாச விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிக்கரம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

இலங்கை சுற்றுலாத்துறை நிபுணர்களுக்கான தேசிய சங்கத்தின் குழுவினர்கள் (National Association for Professionals in Tourism) நாடு முழுவதிலுமுள்ள உல்லாச விடுதிகளில் நீண்ட நாட்களாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பார்வையிட்டு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கொரோணா தொற்று நோயால் தற்போது இலங்கையில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை சுற்றுலாத்துறை நிபுணர்களுக்கான தேசிய சங்கம் (National Association for Professionals in Tourism) இலங்கை சுற்றுலா பொலிஸ் பிரிவுடன் இணைந்து சுற்றுலா பேரழிவு கண்காணிப்பு மற்றும் ஹோஸ்டிங் திட்டம் என்ற தொனிப்பொருளில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாசிக்குடா உல்லா விடுதிகளில் நீண்ட நாட்களாக தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடந்த வியாழக்கிழமை மாலை சந்தித்து உலருணவுப் பொதிகளை வழங்கியதுடன், தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வது மற்றும் அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்களை அடையாளங்காண்பது மற்றும் உதவிகளை வழங்குதல் போன்றவற்றை மேற்கொண்டனர்.

இதன்போது கொழும்பு சுற்றுலாத்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரபாத் விதானகம, கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன விதானகே, பாசிக்குடா சுற்றுலாத்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.எம்.சந்திரபால, இலங்கை சுற்றுலாத்துறை நிபுணர்களுக்கான தேசிய சங்க பிரதிநிதிகள், உல்லாச விடுதி பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இக்குழுவினர் கொழும்பு, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, கண்டி, நுவரெலியா, எல்ல, பாசிக்குடா, அருகம்பே, உடவலவே, மிரிச, உனவதுனா, ஹிக்கடுவ ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து தேவைகள் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையின் குடிமக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முக்கிய கவனம் என்றாலும், எங்களை நம்பி இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளைக் கவனித்துக் கொள்வதும் முக்கியம். எனவே, அவர்களுக்காக இந்த பிரசாரத்தைத் தொடங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டொனால்ட் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment