இலங்கையில் 5ஆவது கொரோனா மரணம் - 44 வயதுடைய ஹோமாகம நபர் - வேறு எவ்வித நோய்களும் இல்லை - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

இலங்கையில் 5ஆவது கொரோனா மரணம் - 44 வயதுடைய ஹோமாகம நபர் - வேறு எவ்வித நோய்களும் இல்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5ஆவது நபர் மரணமடைந்துள்ளார். 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலியிலிருந்து வந்த குறித்த நபர், தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த மார்ச் 23 ஆம் திகதி வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவர் மார்ச் 26 ஆம் திகதி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றையதினம் (04) அவர் மரணமடைந்துள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அவருக்கு வேறு எவ்வித நோய்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றின் காரணமான மரணம் கடந்த 28 ஆம் திகதி பதிவானது. 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.

இரண்டாவது மரணம் கடந்த மார்ச் 30 ஆம் திகதி நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார்.

மூன்றாவது மரணம் ஏப்ரல் 01 ஆம் திகதி பதிவானது. 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஒருவர் மரணித்திருந்தார்.

நான்காவது மரணம் ஏப்ரல் 02 ஆம் திகதி, 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.

இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர். இதேவேளை மார்ச் 25 ஆம் திகதி யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான நபர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் 5 பேரும் என இலங்கையர் 08 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 159 ஆகும்.

தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 159 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (03) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 08 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 159 பேரில் தற்போது 130 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 04 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 250 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment