அரசாங்க வைத்தியசாலைகளில் வழமைபோல் இயங்கும் கிளினிக் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

அரசாங்க வைத்தியசாலைகளில் வழமைபோல் இயங்கும் கிளினிக் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு

(இரா.செல்வராஜா)

அரசாங்க வைத்தியசாலைகளில் நீரிழிவு, இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கான கிளினிக்குகள் வழமைபோல் இயங்கும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நோயாளிகள் வர முடியாத பட்சத்தில் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுகதேகி ஒருவரை அனுப்ப முடியும் எனவும், குறித்த தினத்தில் கிளினிக் வர முடியாத நோயாளர்கள் அந்த வாரத்தில் ஒரு தினத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு நோயாளருக்கு இரு மாத காலத்திற்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படும். ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் கிளினிக் தொடர்பான ஆவணங்கள் ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக செல்லுபடியாகும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment