மொட்டுச் சின்னத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடும் - வீரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

மொட்டுச் சின்னத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடும் - வீரகுமார திஸாநாயக்க

ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தான (ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கீழ்) மொட்டுச் சின்னத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடும். இரண்டு கட்சிகளும் இணைந்து பயணிப்பதற்கான மக்கள் ஆணையே ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஆணைக்கு மாறாக நடந்துகொள்ளத் தயாரில்லையென கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஒரே கூட்டணியில் இணைந்து பயணிக்க முடியாவிடின் எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப போகின்றனரென எம்மை விமர்சிப்பவர்களிடம் வினவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு, டார்லி வீதியிலமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான சக்திகளாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்திருந்தன. ஐக்கிய தேசிய கட்சியால் நாசமாக்கப்பட்ட நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான மக்கள் ஆணையே அளிக்கப்பட்டது. ஒரு எதிர்பார்ப்புடன்தான் மக்கள் வாக்களித்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் வெளியிட்டுவரும் கருத்துகளால் கருத்து மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. என்றாலும் அவர்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடன் எமக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை. நாம் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் இணைந்தே பணியாற்றுகிறோம்.

தனித்துத் தேர்தலை சந்திப்பது குறித்து இதுவரை எவ்விதத் தீர்மானங்களையும் சுதந்திர கட்சி எடுக்கவில்லை. நாம் பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிட உள்ளோம். மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோம். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment