முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய குமார வெல்கம தலைமையில் “நவ லங்கா நிதாஹஸ் பக்ஷயா” (புதிய லங்கா சுதந்திரக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியொன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்சியின் தொடக்க நிகழ்வானது கட்சியின் தலைவர் குமார வெல்கமவின் ஆதரவின் கோட்டை, ஸ்ரீஜவர்தனபுரவில் இடம்பெற்றது.
இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு அக்கட்சியின் தலைவர் குமார வெல்கமவின் தலைமையில் இன்று புறக்கோட்டையில் இடம்பெற்றது.
தூய்மையான பண்டாரநாயக்க கொள்கைக்கான நவ லங்கா நிதஹஸ் பக்ஷய என்ற தலைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, கட்சியின் கொள்கை பிரகடனம் அதன் செயலாளர் திலக் வராகொடவினால் கட்சித் தலைவர் குமார வெல்கமவிற்கு கையளிக்கப்பட்டது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
தமக்கெதிரான நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் குமார வெல்கம இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்தார்.
No comments:
Post a Comment