அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரான திருமதி பேர்ள் கே. வீரசிங்கவை கைது செய்ய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அழைப்பாணை வழங்கப்பட்ட போதிலும் இன்று (06) கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்திற்காக அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
யானை வளர்ப்பு, விற்பனை மோசடியில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படும் நிராஜ் ரொஷான் அல்லது அலி ரொஷான் என அழைக்கப்படுபவர் உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment