(ஆர்.விதுஷா)
ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் எதுவென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆயினும் தமது சின்னம் சஜித் பிரமாதாச எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, சஜித் பிரேமதாசவை பிரமராக வெற்றியடையச் செய்து ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுக்க இருப்பதாகவும் கூறினார்.
கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, சஜித்தை பிரதமராக நியமித்து ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சியை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்து மூன்று மாத காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையோ, புதிய வேலைத் திட்டங்களையோ முன்னெடுக்கவில்லை. இந்த மூன்று மாத காலத்தில் தாம் செயற்திறன் அற்ற அரசாங்கம் என்பதை அது உறுதி செய்துள்ளது.
கடந்த அரசாங்கம் எமதாக இருந்தபோதிலும், நாங்கள்தான் ஆட்சி செய்கின்றோம் என்ற உணர்வு எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை. அதனாலேயே சஜித்தின் தலைமையின் கீழ் யாருடைய அச்சுறுத்தலும் இன்றி ஆட்சியை முன்னெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment