முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஐக்கிய மக்கள் சக்திக்கே முழுமையான ஆதரவினை வழங்குவார் - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஐக்கிய மக்கள் சக்திக்கே முழுமையான ஆதரவினை வழங்குவார்

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒருபோதும் இணைந்து கொள்ளமாட்டார் எனத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கே முழுமையான ஆதரவினை இறுதியில் வழங்குவார் என்றும் கூறினார்.

அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசுவாசமானவர். அவர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையினை பெறவுமில்லை, அதற்கு ஆதரவாக செயற்படவுமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவே அவர் இன்றும் உள்ளார். இந்த தீர்மானம் அவரது அரசியல் கொள்கையினை வெளிப்படுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலில் அவர் யாருக்கு ஆதரவாக செயற்படுவார். என்பது குறித்து உரிய கவனம் செலுத்தி வருகின்றோம். அவர் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து கொண்டதன் பின்னரும் அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைப்பது. கூட்டணியில் இணைந்து செயற்படுவதற்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment