இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்தது - 117 பேர் கண்காணிப்பில், 11 பேர் குணமடைவு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்தது - 117 பேர் கண்காணிப்பில், 11 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 115 இலிருந்து 117 ஆக அதிகரித்துள்ளது.

சிலாபம் மற்றம் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளிலிருந்து குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (29) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக நேற்று (28) இரவு 11.30 மணியளவில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 113 இலிருந்து 115 ஆக அதிகரித்திருந்தது.

நேற்றையதினம் (28) மொத்தமாக 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினம் (29) கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த இருவர் வீடு திரும்பியிருந்தனர்.

அதற்கமைய சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 117 பேரில் தற்போது 105 நோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (28) இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மருத்துவக் கண்காணிப்பில் தற்போது 117 பேர் வைக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அடையாளம் - 117
குணமடைவு - 11
கண்காணிப்பில் - 117
சிகிச்சையில் - 105
மரணம் - 01

மரணமடைந்தவர்கள் (04)
இலங்கையில்
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில்
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள்
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

No comments:

Post a Comment