சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகளின் சுற்றிவளைப்பையடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான வாகனேரி காட்டுப்பகுதியில் மாதுறுஓயா ஆற்றில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடி, வாழைச்சேனை, பகுதியை சேர்ந்த மூன்று உழவு இயந்திரங்கள் வட்டார வன உத்தியோகத்தர்களின் சுற்றிவலைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட மூன்று உழவு இயந்திரங்களில் இரண்டு உழவு இயந்திரங்கள் இதற்கு முன்னரும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டதாக வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment