(ஆர்.விதுஷா)
பொலிசார் தம்மை அச்சுறுத்துவதாக கூறி இன்று ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் கூறியதாவது, ஜனாதிபதி செயலகம் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கலந்தரையாடல்களை மேற்கொள்ளலாம் எனவும் அரசாங்கம் கூறிக்கொள்கின்றது.
இருப்பினும் மறுபுறம் போராட்டங்களை மேற்கொள்பவர்களின் வீடுகளுக்கு சென்று உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றது. இவ்வாறாக இரட்டை வேடம் போடும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
எமது பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தராது தீர்வுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைககளையே அராங்கம் மேற்கொண்டு வருகின்றது. பொலிசாருடைய அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளனர்.
அதேவேளை, தேசிய புலனாய்வு சேவைகள் சட்டத்தினை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன் ஊடாக நீதிக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக அடக்கு முறையை பிரயோகிப்பதனை நோக்காக கொண்டே இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
ஆகவே, இவ்வாறாக அச்சுறுத்தல்களுக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளோம்.
எதிர்வரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். அத்துடன், தொழில் நியமனங்கள் வழங்கப்படும் வரையில் போராட்டங்களை கைவிடப்போவதுமில்லை என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment