இலங்கை மக்களின் செயற்பாடு குறித்து சீனா கவலை - இலங்கை மக்களுக்கு சீன தூதுவரின் உருக்கமான வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

இலங்கை மக்களின் செயற்பாடு குறித்து சீனா கவலை - இலங்கை மக்களுக்கு சீன தூதுவரின் உருக்கமான வேண்டுகோள்

இலங்கையில் உணவகங்களில் சீன பிரஜைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது மற்றும் வாகனங்களில் அவர்களை ஏற்றுவதற்கு தயக்கம் காணப்படுவது குறித்து சீனா கவலை வெளியிட்டுள்ளது. 

இலங்கைக்கான சீன தூதுவர் செங் சூயுவான் அறிக்கையொன்றில் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். 

அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது டாக்சிகள், மற்றும் சில ஹோட்டல்களில் சீன மக்களுக்கு இடமளிக்க மறுப்பது கவலையளிக்கின்றது. 

உண்மையான நட்பு என்பது நெருக்கடியான தருணங்களிலேயே வெளிப்படுத்தப்பட வேண்டும் வெளிப்படும் இலங்கை மக்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். அதேவேளை சீனா பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு வேகமாக நடவடிக்கைகளை எடுப்பதை இலங்கை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதியில் இந்த நோய்க்கு முடிவுகாண முடியும், அந்த நாளில் நாங்கள் திரும்பிப் பார்க்கின்றபோது, நாங்கள் எங்கள் ஆதரவாளர்களின் முகங்களில் காணப்பட்ட உறுதிப்பாட்டையும், அவர்களின் ஆதரவான கரங்களில் காணப்பட்ட இதமான தன்மையையும் நினைவில் வைத்திருக்க முடியும் என கருதுகின்றோம். 

கொரோனோ வைரஸ் கரரணமாக ஒவ்வொரு நாளும் புதிதாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனினும் நோய் தொற்றிற்கு எதிராக போராடுவதற்காக சீன அதிகாரிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment