கொரோனா வைரஸிலிருந்து பெண் ஒருவரை குணப்படுத்திய புதிய மருந்தை பயன்படுத்தி இரணடாவது நபருக்கு சிகிச்சை! - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

கொரோனா வைரஸிலிருந்து பெண் ஒருவரை குணப்படுத்திய புதிய மருந்தை பயன்படுத்தி இரணடாவது நபருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவரை, அந் நோயிலிருந்து குணமடைய உதவிய புதிய மருந்துக் கலவையுடன் இரண்டாவது நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தாய்லாந்தில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் காய்ச்சல் மருந்துகளின் கலவையுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

தாய்லாந்தின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளிக்கு இதே முறையில் சிகிச்சையை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் இன்றைய தினம் ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கிரியாங்சாக் அதிபோர்ன்விச் கூறுகையில், இந்த மருந்துகளின் கலவையுடன் சிகிச்சையளிக்கப்பட்ட இரண்டாவது நோயாளியின் நிலையை தீர்மானிக்க அதிகாரிகள் சோதனை முடிவுகளுக்காக காத்துள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment