இஸ்ரேலிய விமானம் சூடான் வான் பகுதியில் பறக்க முதல்முறையாக அனுமதி வழங்கியது - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

இஸ்ரேலிய விமானம் சூடான் வான் பகுதியில் பறக்க முதல்முறையாக அனுமதி வழங்கியது

சூடான் அரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய அந்நாட்டு வான் பகுதி ஊடாக இஸ்ரேலிய வர்த்தக விமானம் முதல்முறை பயணித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

சூடான் வழியாக முதல் இஸ்ரேலிய விமானம் கடந்த சனிக்கிழமை தென் அமெரிக்காவை நோக்கி பயணித்ததாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்க யூதத் தலைவர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விமானப் பாதை மூலம் மூன்று மணி நேர விமானப் பயண நேரம் சேமிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமது வான்பகுதி ஊடாக இஸ்ரேலிய விமானங்களுக்கு ஆரம்பக்கட்ட அனுமதி அளிக்கப்பட்டதாக சூடான் இந்த மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டது.

முன்னாள் எதிரி நாடான சூடானுடன் இராஜதந்திர உறவுகளை வழமைக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நெதன்யாகு கூறினார். 

பலஸ்தீனத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் சூடான் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை மேம்படுத்துவது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

சூடானின் புதிய அரசு அமெரிக்காவின் தடையை தளர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே அந்நாடு இஸ்ரேலுடனான உறவை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment