இந்தியாவின் அசாம் மாநிலத்தின் திப்ருகாரில் கச்சா எண்ணெய் குழாய் ஒன்று ஆற்றுக்கு அடியில் வெடித்துள்ளாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆற்றின் மேற்பரப்பில் தீ பற்றி எரிவதோடு, கரும் புகை மண்டலம் அப்பகுதி முழுவதுமாக காணப்படுகின்றது. அத்தோடு தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு ஆற்றில் அமைக்கப்பட்ட எண்ணெய் குழாயே இவ்வாறு வெடித்துள்ளது.
இந்நிலையிலேயே குழாய் வெடித்ததில் ஆற்றில் கசிந்த கச்சா எண்ணெய் மீது இனந்தெரியாத சிலர் தீ வைத்ததாக கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
அத்தோடு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment