72 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக எமது முன்னோரும் போர் வீரர்களும் மேற்கொண்ட தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அவற்றிற்கு நன்றி செலுத்துவதற்கும் உகந்த சந்தர்ப்பமாகுமென நான் நம்புகின்றேன்.
நாம் முகங்கொடுத்த பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு மத்தியில், மனிதகுல அபிவிருத்தி தொடர்பில் இக்காலகட்டத்தில் நாம் அடைந்து கொண்ட முன்னேற்றமானது பாராட்டத்தக்கதாகும்.
நம் நாடு இன ரீதியாக அதிகளவில் பிளவுபடுத்தப்பட்டு வருகிறது என்ற கவலையைத் தீர்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றேன். இந்த பிளவுபடுத்தலானது இனத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற பொதுவான கருத்துடன் நான் இணங்கவில்லை.
மாறாக, இந்த பிளவுபடுத்தலானது குறுகிய இனம் சார்ந்த அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நான் நம்புகிறேன். இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலின் நோக்கங்கள் தேசத்தைப் பிளவுபடுத்துவதாகும். உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்காக இந்தக் கருத்தினை ஒன்றிணைத்து தோற்கடிப்போம்.
எதிர்வரும் மாதங்களில் நம் நாடு பல சவால்களை எதிர்கொள்ளவுள்ளது. என்றாலும் நாம் ஒன்றிணைந்து எமது பங்களிப்பை வழங்கினால் அவற்றை வெற்றி கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். நம்முடைய தனிப்பட்ட கருத்துக்களை விட, நமது நாட்டின் கருத்தை முன்னிறுத்துவோம்.
நமது பல்வகைமையானது நமது பலமாக இருக்கட்டும். வேறுபாடுகளை மதிப்பதுடன் நமக்கிடையிலுள்ள சந்தேகத்தையும் ஒதுக்கி வைப்போம். தடைகளைத் தாண்டி, அனைவரையும் உள்ளடக்கிய, ஒன்றுபட்ட மற்றும் வளமான இலங்கையை - ஒரே தேசத்தை, ஒரே கொடியின் கீழ் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றிணைவோம்.
ஏ. ஜே. எம். முஸம்மில்
வட மேல் மாகாண ஆளுநர்
No comments:
Post a Comment