நல்லை ஆதின முதல்வருக்கும் அங்கஜன் எம்.பிக்கும் இடையே விஷேட சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

நல்லை ஆதின முதல்வருக்கும் அங்கஜன் எம்.பிக்கும் இடையே விஷேட சந்திப்பு

நல்லூர் திருஞானசம்மந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்ச்சாரிய சுவாமிகளுக்கும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெற்றது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளிற்கு ஏற்ப பலதுறைகொண்ட நிபுணர்களைக் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று ஆயர் இல்லத்தினால் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த 01 திகதி அதில் பிரதிநிதியான யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் அவர்களை சந்தித்து அங்கஜன் இராமநாதன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து நல்லை ஆதினத்திடனான சந்திப்பு இன்று (03) இடம்பெற்றுள்ளது. 

நல்லை ஆதின முதல்வர் அங்கஜன் இராமநாதனிடம் வீடமைப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், தொழிநுட்பம் சார்ந்த வேலைத்திட்டங்கள், கல்வித் திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் கால்நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும் அவை வளங்கப்பட்ட பின்பும் அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிலவும் நீர் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும் யாழ். மாவட்ட கழிவுப் பொருட்கள் சம்மந்தமான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற சில கோரிக்கைகளை முன் வைத்தார். 
இந்த சந்திப்பில் ஆதினத்திடம் இராமநாதன் யாழ்ப்பணத்தில் விவசாயம், மீன்பிடி, கல்வி ஆகிய மூன்று துறைகளும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். நல்லை ஆதினமாகிய தமது சிந்தனைக்கு ஏற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முழு ஆதரவு தருகிறேன் யாழ்ப்பணத்தில் நிலவும் உடனடி தேவைகள் இனங்கண்டு கூறுங்கள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். 

போரினால் பாதிக்கப்பட்டோர், மற்றுதிறானாளிகள், முன்னால் போராளிகள் மற்றும் பெண் தலமைத்துவ குடும்பங்கள் தேவைகள் கண்டறியப்பட்டு உதவிகள் கண்டறியப்படும். 

எமது ஐனாதிபதியால் தொலைபேசி திருத்தம், A/C திருத்தம் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பயிற்றுவிப்புக்கள் இலவசமாக ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பணத்தில் தொழில் வாய்ப்புக்கள் சுயமாகவே இனிவரும் காலங்களில் உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

தனியார் கல்வி நிறுவனங்கள் மீதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கவுள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தினசரி மாலை 6.00 மணிக்கு பின்பு நடைபெறும் கல்வி நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்பட்டு கட்டுபாடுகள் அதிகரிக்கவுள்ளது. இதைபற்றி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது “அரசியலைத் தாண்டியும் மக்களை பார்க்கும் நேரமிது” என்ற வாக்குறுதியை அளித்தார்.

No comments:

Post a Comment