பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பின் 34வது பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையின்பேரிலும் இப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் திருட்டு, நம்பிக்கை மோசடி மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களின் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களாகும்.
கற்பழிப்பு, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்த பட்டியலில் இல்லை.
இந்த ஆண்டு ஜனவரி 31 அன்று சிறையில் இருந்த கைதிகளுக்கு மட்டுமே இப் பொதுமன்னிப்பு ஏற்புடையதாகும். பெப்ரவரி 04ஆம் திகதியே இவர்கள் விடுவிக்கப்படுவர்.
No comments:
Post a Comment