அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இல்லாமைக்கான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கவயீனம் என்பதை முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கருத்து தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறு தெரிவித்தார் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக் கட்சியான உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பைசர் முஸ்தபா ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி மட்டுமல்ல திறமையான அமைச்சராகவும் செயற்பட்டவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமாக செயற்பட்டவர். அப்படியிருந்தும் பைசர் முஸ்தபாவின் பெயரை அமைச்சரவை அமைச்சராக நியமிக்க சுதந்திரக் கட்சி பிரேரிக்காமை கவனயீனம் காரணமான தவறாக இருக்கலாம்.
ஆகவே முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த தேர்தல் வரை பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான முஸ்லிம்களை விட சுதந்திரக் கட்சிக்கான முஸ்லிம் ஆதரவாளர்களே அதிகமாகும்.
அந்த வகையில் இது விடயத்தை சுதந்திரக் கட்சி கவனத்தில் எடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவை அமைச்சரவை அமைச்சராக பிரேரிக்கும் படி முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment