கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யம் நோக்குடன் பிரதமர் தலைமையிலான குழு மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.
இந்த விஜயத்தின் முக்கிய விடயமாக மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் புதுநகரிலுள்ள விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்த காரிய பெரம தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார், பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பிலிருந்து நேரடியாக இந்திய சுற்றுலாத் தலங்களை தரிசிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்கள் ஊடாகவும் எதிர்வரும் காலங்களில் சர்வதேச சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான இதன்போது விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு விமான நிலைய கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் பிரதமர் தேவையான பணிப்புரைகளை விடுத்தார்.
இதேவேளை, விமான நிலையத்தின் ஓடு பாதைகளை பார்வையிட்டார் பிரதமர், மாவட்டத்தின் சுற்றுலாத் துறையையும் பொருளாதார அபிவிருத்தியையும் உயர்த்தும் நோக்குடன் பல பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment