ஜம்மு - காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, அதன் உள்நாட்டு விவகாரம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370 வது மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான சட்டமூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டது.
இந்த விடயம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாண்மை நாடுகள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், பிரதமர் ரணிலும் இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “லடாக் ஒரு இந்திய மாநிலமாக மாறும். லடாக்கின் மக்கள் தொகையில் 70% பௌத்தர்களாக இருப்பதால், இது பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக இருக்கும். லடாக் உருவாக்கம் மற்றும் அதன் மறுசீரமைப்பு என்பது இந்தியாவின் உள் விவகாரம்” என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment